ரஜப் தையிப் ஒர்தகோனும் – படுகொலையும்.

ஸீபல் எட்மோட்ஜ் ஓர் அமெரிக்கப் பெண்மணி. துருக்கிய மூலத்தைக் கொண்டவர். அமெரிக்க பெடரல் புலனாய்வு நிறுவனத்தில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றினார். 2001 செப்டம்பர் தாக்குதலின் பின்னர் மத்தியகிழக்கு நாடுகளின் மொழிகளில் புலமை பெற்றிருந்தன் காரணமாவே இப்பதவி அவருக்குக் கிடைத்தது. 2002 மார்ச்சுடன் அவர் பதவியிலிருந்து துரத்தப்பட்டார். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் தவறிழைத்தமை, FBI யின் இரகசியங்களை வெளியிட்டமை என்ற பல காரணங்கள் அப்போது கூறப்பட்டன. இப்பெண் மீது கடுமையான அடக்கு முறையைப் பிரயோகித்தது. அமெரிக்க வரலாற்றில் மிகக் கடுமையான அடக்கு முறைக்குட்பட்ட நபர் என இப்பெண் வர்ணிக்கப் படுகிறார்.

ஜேம்ஸ் கொலமெத் தயாரித்து முன்வைக்கும் The Eyeopener என்ற நிகழ்ச்சியில் அப்பெண் வெளியிட்ட தகவல்களை கீழே தருகிறோம்:

துருக்கியின் தலைவர் ரஜப் தையிப் ஒர்தகோன் தனது மிகப் பேரிய எதிரிகளை வெற்றி கொண்டார். அந்த எதிரிகள் நாட்டின் உள்ளே உள்ள அவரது அரசியல் எதிரிகளன்று. அவர்கள் சர்வதேச பெரும் எதிரிகள். பெரும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள், பெரும் நிதி நிறுவனங்கள், பெரும் வங்கிகள் என்பவையே அவையாகும். மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எவ்வாறு துருக்கி பாராளுமன்றத்தின் ஊடாக பல சிக்கல்களையும், தொல்லைகளையும் கொடுத்தார்கள் . உள் நாட்டு, சர்வதேசிய ஊடகங்கள் ஊடாக எவ்வாறு கடுமையான எதிர் பிரச்சாரங்களையும் கொண்டு சென்றார்கள் என விளக்கி விட்டு இவற்றை எல்லாம் ஒர்தகோன் வெற்றி கொண்டமை மிக ஆச்சரியத்திற்குரியது எனக் கூறுகிறார். ஒர்தகோன் போன்று இவ்விடயத்தில் செயற்பட்ட ஒரு மனிதனை நான் பார்த்துமில்லை, கேட்டுமில்லை என்று மேலும் ஆச்சரியத்தோடு அவர் கூறுகிறார்.

பின்னர் அடுத்த எதிரி சர்வதேச பெரும் நிதி நிறுவனங்கள் துருக்கியின் வங்கிகள் மிகப் பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய வங்கிகளின் போக்கை கொண்ட வட்டி வங்கிகள். ஆனாலும் அவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் ஒர்தகோன் வைத்திருப்பது ஆச்சரியமானது என அவர் விவரிக்கிறார்.

அடுத்த மிகப் பெரும் எதிரி ஜியோனிஸ்டுகள். இவர்களுக்கு முன்னால் மிகுந்த உறுதியோடும், வளைந்து கொடுக்காமல் எவ்வாறு ஒர்தகோனால் நிற்க முடிகிறது. தனது எதிரியை வீழ்த்துவதில் ஜியொனிஸ்டுகள் கைதேர்ந்தவர்கள். அப்படியிருந்தும் இவர் மீது ஏன் கைவைக்க முடியவில்லை என ஆச்சரியப்படுகிறார் ஸீபல்.

உண்மையில் உலகை ஆள்வது வெளிப்படையான அரசுகளோ, சர்வதேச நிறுவனங்களோ அல்ல. பல்வேறு நிதி, முதலாளித்துவ நிறுவனங்களே உலகை ஆள்கின்றன. பல்வகை சர்வதேசக் கம்பனிகளின் லொபிகள், ஜியொனிஸ்ட் லொபி, என்பவையே அவை. இவை தமது இலக்கை அடைய சட்ட ரீதியான, சட்டரீதியற்ற எந்த வழிமுறையையும் கையாள்வார்கள்.

இறுதியில் ஸீபல் கூறுகிறார் – ஒர்தகோனின் சாதனைகள் தொடர்ந்து இவ்வாறு செல்லுமானால் அவரது எதிரிகளுக்கு அவரைப் படுகொலை செய்வது தவிர வேறு வழி இருக்காது.

பல்வெறு தொடர்புகளும், ஏற்கனவே இருந்த தொழில் அனுபவத்தின் ஊடாக ஸீபல் துருக்கியின் ஜனாதிபதி தையிப் ஒர்தகோனைப் படுகொலை செய்வதற்கான திட்டம் உலகின் எங்கோ ஓர் இடத்தில் ஆய்வில் உள்ளது என நம்புகிறார்.

Reply