DIALOG EASY CASH மூலம் எமக்கு செலுத்தலாம். (0779685124) > --- எமது தளத்தில் இலவசமாக எமது காணொளிகளை பதிவிறக்கம் செய்பவர்கள். --- --- தாங்கள் விரும்பின் அதற்கான பணத்தை DIALOG EASY CASH மூலம் எமக்கு செலுத்தலாம். (0779685124) --- --- அல்லது --- --- எமது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடலாம். --- --- ACCOUNT NAME: AL QURAN OPEN PRELIMINARY ARABIC SCHOOL --- --- ACCOUNT NUMBER: 153200120008057 (PEOPLES BANK) AKURANA. --- --- எமது தஃவாவுக்கான செலவுகளை ஈடுசெய்வதில் DVD விற்பனை மிகவும் முக்கியமானது. --- --- இணையத்தில் பதிவேற்றத்தை தொடர்ந்து எமது DVD விற்பனையில் பெருமளவு வீழ்ச்சி கண்டுள்ளது. --- --- அதனை ஈடு செய்வதே எமது நோக்கம். --- --- (Al-Quran Open College Media Unit & Marketing Unit)

New Live Channel

அந்த மறுமையின் வீடு அதனை நாம் பூமியில் அதிகார மேலாதிக்கத்தையோ, அராஜகத்தையோ விரும்பாதோருக்கு ஆக்கியுள்ளோம். இறைபயம் உள்ளோருக்கே இறுதியில் நல்ல முடிவு உள்ளது. (ஸூரா கஸஸ்: 83)

இது இஸ்லாமிய அறிவுக்கும், சிந்தனைக்குமான இணையதளம். இஸ்லாமிய அறிவையும், சிந்தனையையும் சமூக மட்டத்தில் மிகப் பரவலாக கொண்டு செல்வதற்கான மிகச் சிறந்த வழிமுறை இது எனக் கருதுகிறோம். எமது சமூகத்தின் மிக  அடிப்படைப் பிரச்சினை இஸ்லாமிய அறிவின்மையும், சிந்தனை சிக்கலுமாகும் என நாம்  கருதுகிறோம். அப்பின்னணியிற்றான் இந்த இணையத்தளத்தை இத்தலைப்பின் கீழ் அமைத்துள்ளோம்.

பரந்தளவில் இதனூடாக நாம் இஸ்லாமிய அறிவையும், சிந்தனையையும் முஸ்லிம் சமூகத்தினுள்ளே கொண்டு செல்கிறோம்.

முஸ்லிம் அல்லாதவர்களும் இதன் மூலம் இஸ்லாமிய சிந்தனையையும், முஸ்லிம்களையும் புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஓர் ஆரோக்கியமான கருத்துப்பரிமாறலொன்றை சமூகங்களுக்கு மத்தியில் உருவாக்கி விட முடியும்.


ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இறை வசனத்தின் படி முஸ்லிம்கள்   உலகில் அதிகார மேலாதிக்கத்தை விரும்பவில்லை. அராஜகத்தை விரும்பவில்லை. இந்த வகையில் அவர்கள் பயங்கரவாதிகளோ, வன்முறையாளர்களோ அல்ல. மனித சமூகத்திற்கு அருளாக அமையும் தூதொன்றை சுமப்பவர்களே அவர்கள். இந்த வகையில் நாமிங்கு அருளையும், சாந்தியையும், நல்லுறவையும் பரப்புபவர்களாகவும், வளர்ப்பவர்களாகவும் இருப்போம்.

நாம் சிறுபான்மையாக இந்த நாட்டில் பெரும்பாலும் சிதறி வாழ்கிறோம். இந்த எமது வாழ்வமைப்புக்கு ஏற்ப இஸ்லாமிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் முன்வைத்து இலங்கை முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்துவதில் எமது பங்களிப்பை செலுத்த முனைகிறோம்.

இப்பின்னணியில் இணையதளம் கீழ்வரும் பகுதிகளை உள்ளடக்கி இருக்கும்.

இஸ்லாமிய சிந்தனை பற்றிய ஆழ்ந்த அறிமுகம்.

•    அல்குர்ஆன், ஸூன்னா பற்றிய அறிமுகம், அவற்றின் நேரடிக் கருத்துக்கள்,  சிந்தனைகள்.

•    இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள் பகுதி:

பழைய, புதிய இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்களின் கருத்துக்களை அவர்களது நூல்கள், கட்டுரைகள் ஊடாக முன்வைத்தல்.

•    இலங்கை முஸ்லிம் சமூக விவகாரங்கள் பகுதி


அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் பற்றிய இஸ்லாமிய கருத்துக்களை இலங்கை முஸ்லிம் சமூக நிலைகளோடு இணைத்து அபிப்பிராயங்கள், ஆலோசனைகள், தீர்வுகள் முன்வைத்தல்.     இந்த வகையில் : 

1)    குடும்பம் 
2)    
அல் குர்ஆன் மத்ரஸா
3)    
பாலர் முன் பாடசாலை
4)    
அஹதிய்யா பாடசாலை
5)    
அரச பாடசாலை 
6)    
பைதுஸ் ஸகாத்
7)    
பள்ளி

போன்ற பல்வேறு நிறுவனங்கள் குறித்தும் முஸ்லிம் அரசியல், 

பொருளாதார வாழ்வு சம்பந்தமாகவும் ஒரு  விரிந்த பார்வையை ஏற்படுத்த முனைதல்.


•    இஸ்லாமிய உலக விவகாரங்கள் :

அங்கேற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வு முடிவுகள், அபிப்பிராயங்களை முன்வைத்து பயன்பெற முயலல்.


•    ஆன்மீக வாழ்வு : 
ஆன்மீக மேம்பாடு இஸ்லாமிய வாழ்வின் அடிப்படை இந்த வகையில் ஆன்மீக ரீதியாக உயர்பெற ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கல்.


•    இணையத்தள ஆசிரியரின் நூல்கள்கட்டுரைகள்உரைகள்,சந்திப்புகள்என்பவற்றைத் தரல்

•    குத்பாக்கள் பகுதி:

வெள்ளக்கிழமை குத்பாக்கள் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மிக அமைதியான சூழலில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் என்ற வகையில் பெரியதொரு          
முக்கியத்துவத்தைப்     பெறுகின்றன. எனவே அவற்றிக்கான ஆலோசனைகள் வழங்கல், சில மாதிரிகளை வழங்கல். 


•    கேள்விபதில் பகுதி :


இணையத்தளத்திற்கு வருகை தருவோர் தம் கேள்விகளையும், சந்தேகங்களையும், மாற்று அபிப்பிராயங்களையும் முன்வைப்பதற்கான பகுதி இது. இதனூடே ஒரு கருத்துப் பரிமாறலும் தோன்ற முடியும்.

இன்ஷா அல்லாஹ் இந்த இணையத்தளம் மிக அழகிய முறையில் மிகப் பயனுள்ளதாக இயங்க முனையும். அல்லஹ்விடம் பிரார்த்தித்து இதனை ஆரம்பிக்கிறோம். சகோதரர்களையும் பிரார்த்தித்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.