இஸ்லாத்திற்கு மத விளக்கம் கொடுத்தமையும், மங்கோலியர் படையெடுப்பும்

 

முஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கு இரு காரணங்கள்:

  1. இஸ்லாத்திற்கு மத விளக்கம் கொடுத்தமை.
  2. மங்கோலியர் படையெடுப்பு.

இது அலி இஸ்ஸத் பிகோபிச் (ரஹ்) விளக்கம்.

இஸ்லாத்திற்கு மதவிளக்கம் கொடுத்தமை என்பதன் பொருள் ஆன்மீக வாழ்வு, பௌதீக உலக வாழ்வு இரண்டிலும் சமநிலை பேனாது ஆன்மீகப் பகுதிக்கு அளவு மீறிய அழுத்தம் கொடுத்தமையாகும்.

இஸ்லாத்தின் பிற்காலப் பிரிவுகளில் ஸூபித்துவத்தின் கடுமையான செல்வாக்கின் விளைவாக ஒரு வகைத் துறவு வாழ்வே இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் உயர்ந்த வாழ்வு எனக் கணிக்கப்பட்டமை.

வணக்க வழிபாடுகளில் நிறைய பித்அத்கள் கலந்தமை.

பௌதீக உலக ஆய்வுகள், சமூக வாழ்வுக் கலைகள் வளராமை போன்ற இவை அனைத்தும் வீழ்ச்சிக்குக் காரணமாயின.

இப்போதும் இந்த வீழ்ச்சியின் கூறுகளை நாம் அடையாளம் காணலாம்.

  • பள்ளி கட்ட, மத்ரஸாக்கள் அமைக்க செலவிடல்.
  • பாடசாலை, சமூக கலைகள் சார்ந்த கல்விக்கு செலவிடல்.
  • தஃவா போன்ற நேரடி வேலைக்கு செலவிடல்.
  • அரசியல் வேலைகளில் ஈடுபாடு காட்டல், செலவிடல்.

இவற்றை ஒப்பிட்டு நோக்குங்கள்.

இலக்கியப் பகுதிகளில் எமது ஈடுபாடு, அதற்கான வேலைத் திட்டங்கள் அதற்காக செலவிடல் எவ்வளவு தூரம் சமூகத்தில் உள்ளது.

இவ்வாறு பௌதீக உலக வாழ்வும், சமூக வாழ்வும் புறக்கணிக்கப் படும் போது அந்த சமூகம் வீழ்ச்சியுறும். அது வளர்ச்சி காண்பது சாத்தியமில்லை.

மங்கோலியர் படையெடுப்பு:

இஸ்லாமிய உலகு விஞ்ஞான ரீதியாக, அறிவு ரீதியாக முன்னேறி இருந்தது. விளைவாக இஸ்லாமிய உலகில் வாசிகசாலைகள், ஆய்வு நிறுவனங்கள் நிறைந்திருந்தன. பக்தாத், டமஸ்கஸ் போன்றன அறிவின் மத்திய நிலையங்களாக இருந்தன.

மங்கோலியர் காட்டு மிராண்டிகள்; நாகரீகமற்றவர்கள். எனவே இந்த வாசிகசாலைகள், ஆய்வு நிறுவனங்களை அழித்தொழித்தார்கள். விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் கொன்றொழித்தார்கள்.

யூப்ரடீஸ், தைகிறீஸ் நதிகளில் எறியப்பட்ட நூல்களால் நதி நிறைய, அதனைப் பாலமாக பாவித்து கடந்து சென்றார்கள் என்று சொல்வார்கள். இது ஓரளவு மிகைப்படச் சொல்லப்பட்டதாக இருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்த அழிவின் பாரதூரத்தை இங்கு புரிந்து கொள்ள முடியும். இதனால் முஸ்லிம்கள் அறிவு அடித்தளத்தை இழந்தார்கள். விளவைாக மீண்டும் அவர்களால் ஓர் அறிவு சக்தியாக எழ முடியாமலேயே போய்விட்டது.

உதாரணமாக 3ம் உலக மகா யுத்தமொன்று நிகழ்ந்தது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த அழிவிலிருந்து தப்புபவர்கள் கொங்கோ போன்ற பெரும் காடுகளில் வாழும் வேடர்களாகவே இருப்பர். அப்போது உலகம் மிகப் பின்தங்கிய நிலைக்குப் போகும். முற்றிலும் இஸ்லாமிய உலகிலும் இதுதான் நடந்தது.

Reply