உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க…
தேர்தல் ஓரளவு சூடு பிடித்துள்ள நாட்களில் வாழ்கிறோம். பல்வேறு கட்சிகளும் சமூக அடிமட்டத்திலிருந்து தமது பலத்தை ஓரளவு பரீட்சித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது. மாகாண சபைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க …
தேர்தல் ஓரளவு சூடு பிடித்துள்ள நாட்களில் வாழ்கிறோம். பல்வேறு கட்சிகளும் சமூக அடிமட்டத்திலிருந்து தமது பலத்தை ஓரளவு பரீட்சித்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது. மாகாண சபைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க …
உள்ளூராட்சி முறைமை என்பது அரசியலில் அடிமட்டப் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்துவதாகும். இம் மன்றங்கள் மூலம் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல் முழுமையாகச் சாத்தியப் படாவிட்டாலும் மக்களின் அடிமட்டத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இவை உந்து சக்தியாக உள்ளன.
நாம் இப்போது ஓர் உள்ளூராட்சித் தேர்தலை சந்திக்கிறோம். சிறுபான்மைக்கு அரசியல் வாழ்வு தவிர்க்க முடியாதது. மிகவும் அவசியமானது.
தொழுகையின் போது ஸுஜுதில் அரபு அல்லாத சொந்த மொழிகளில் வாயால் மொழிந்து பிரார்த்தனை செய்யலாமா?
முஸ்லிம் சமூகத்தின் சமூக ரீதியான இயக்கம் எவ்வாறானது என்பதை இதுவரை எழுதி வந்தோம். பொருளாதாரம், அரசியல் என்ற இவ்வாறான எப் பகுதிசார் இயக்கமானாலும் துறைசார் சார்ந்தோர் பங்களிப்பு அங்கு முக்கியமானது, முதன்மையானது என்பதை அந்த விளக்கங்களினூடே கண்டு வந்தோம்.
சிறுபான்மை பெரும்பான்மை மோதல் தவிர்க்க முடியாததா? நாம் என்ன முயற்சி செய்தாலும் இந்த இனக்கலவரத்தில் எரிந்து போவதைத் தவிர்க்க முடியாதா?
முஸ்லிம் சமூகத்தின் அடுத்த இயக்கம் சுகாதாரப் பகுதி சார்ந்ததாகும். மனிதனின் உடலும், உள்ளமும் அந்தப் பகுதியின் இரு அடிப்படை அம்சங்களாகும். உடல், பௌதீக சுகாதாரம், மருத்துவம் சார்ந்தது. உள்ளம், மனோதத்துவவியல் சார்ந்தது.
இம்முறை இன்னொரு பகுதியைப் பார்ப்போம். அது பொருளாதாரப் பகுதியும், அரசியல் பகுதியுமாகும். முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் வாழ்வியக்கம் குறித்து தொடராகப் பார்த்து வருகிறோம்.
வணக்க வழிபாடுகளின் பின்னர் சமூக விவகாரங்கள் சார்ந்த இயக்கமொன்று முஸ்லிம் சமூகத்திற்குள்ளது. அப் பகுதிக்கான வழிகாட்டலும் மிகவும் அடிப்படையானது. இப் பகுதி பற்றியே இங்கு நோக்குகிறோம்.
ஒரு முஸ்லிம் சமூகத்தின் அடிப்படையான இயக்கம் – அது சிறுபான்மையாயினும், பெரும்பான்மையாயினும் – நம்பிக்கையும், வணக்க வழிபாடுகளுமாகும். நம்பிக்கை பகுதி அடிப்படையில் அறிவு சார்ந்தது. எனவே பாடசாலைகள் ஊடாக இதனை உயிரோட்டமாக எவ்வாறு கொடுக்கலாம் என ஒரு முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும்.