நிரந்தரத் தீர்வை நோக்கி…
இவ்வாறு கலக்கத்துடனும், பதட்டத்துடனும் தொடர்ந்து வாழ முடியாது. உடனடித் தீர்வுகளுடன் நாம் நின்று விடவும் கூடாது. நிரந்தரத் தீர்வு நோக்கி நாம் நகர வேண்டும்.
இவ்வாறு கலக்கத்துடனும், பதட்டத்துடனும் தொடர்ந்து வாழ முடியாது. உடனடித் தீர்வுகளுடன் நாம் நின்று விடவும் கூடாது. நிரந்தரத் தீர்வு நோக்கி நாம் நகர வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்னால் ஜின்தோட்டை, இரண்டொரு கிழமைகளுக்கு முன்னால் அம்பாறை தற்போது திகன என முஸ்லிம் – சிங்கள இனக் கலவரங்கள் தொடர்கின்றன.
சிறீ லங்காவின் பிரச்சினை இதுதான். சுதந்திரத்திற்குப் பின்னான அதன் வரலாற்றில் அனைத்து சமூகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமை தோன்றவே இல்லை. அந்தப் பின்னணியில் இன முரண்பாடும் அதனால் உருவாகும் சிக்கல்களும், கைகலப்புகளும், இனக் கலவரங்களும் இந்த நாட்டின் சாபக் கேடாகிப் போய்விட்டது.